சனி, 15 ஜனவரி, 2011

சொல்வளம் - 1: விடைகள்

சொல்வளம் 1ல் கொடுத்த எல்லாச் சொற்களுமே திருக்குறளில் இருந்து எடுக்கப் பட்டவை.  இவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தீர்கள் என்றால் உங்களுக்குத் திருக்குறள் பயிற்சி இருக்கிறது என்றும் பொருள்.  வாழ்த்துகள்.

ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண்

தரம்  -  உங்கள் மதிப்பெண்

புலவர்                      -   18 - 20
தலைமாணாக்கர் - 15- 17
இடை மாணாக்கர்-   11 - 14
கற்றுக்குட்டி           -   6 - 10
குருட்டாம்போக்கு   1-5
தமிழ் தெரியாது     -    0 

======================================================

1. அழுக்காறு  4. பொறாமை
2. விசும்பு - 3. மழை மேகம்
3. பனுவல் - 2. நூல்
4. சிவிகை - 3. பல்லக்கு
5. வையம் - 2. பூமி
6. மாண்பு - 2. பெருமை
7. செறிவு2. கூட்டம்
8. ஊருணி - 2. குளம்
9. ஒப்புரவு - 3. ஒற்றுமை
10. வாய்மை- 4. உண்மை 
11. கேணி - 3. அகழி
12. கூகை - 4. கோட்டான் 
13. பிணி - 3. நோய் 
14. பண் - 2. இசை 
15. தாளாண்மை - 1. விடாமுயற்சி 
16. தகைமை - 2. மதிப்பு 
17. இடும்பை - 3. நோய்
18. வேட்கை - 3. விருப்பம்

19. வீறு - 1. சிறப்பு 
20. அங்கணம் 4. சாக்கடை

3 கருத்துகள்:

rasikai சொன்னது…

மிக விழுமிய எண்ணத்தோடு மிகச் சிறப்பாகத் தொடங்கிய மிக நல்ல முயற்சி! இனிதே வளர்ந்து செழிக்க என் நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள்!

அன்புடன்,
ராஜம்

பெயரில்லா சொன்னது…

பாராட்டுகள் மணிவண்ணன். நல்ல முயற்சி.
திருக்குறள் போன்ற பழைய இலக்கியங்களை நேரடியாக ஐயமின்றி அறிய மக்களுக்கு உதவும்.

மேலே சிலசொற்களின் பொருள்கள் பொதுவாகப் பொருந்துமாயினும் திருக்குறளில் அந்தப் பொருள்களில் பயில்வது ஐயமே. கேணி என்பது கிணறு என்றும் செறிவு என்பது அடக்கம் என்றும் திருக்குறளில் பயிலும்; விசும்பு என்பது வானம் என்று அடிப்படைப்பொருள்.
பண் என்பது பொதுவாக இசையென்று பயிலாமல் இராகம் என்ற பொருளில் கண்ணோட்ட அதிகாரத்திற் பயிலும்; பரிமேலழகர் பண்களாவன பாலையாழ் முதலான நூற்றுமூன்று என்பார். இதற்கு அகராதியை மட்டும் பார்த்துச் சொல்லமுடியாது; குறிப்பிட்ட குறளையும் அதன் பழைய உரைகளையும் பார்த்துத்தான் சொல்லமுடியும்.

எனவே இதுபோன்றவற்றை இன்னும் கொஞ்சம் தேற்றமாகத் தெரிவித்தால் இன்னும் சிறந்து உதவும் உங்கள் அரிய முயற்சி.

பெரியண்ணன் சந்திரசேகரன்

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

முனைவர்கள் ராஜம், சந்திரசேகரன்,

கருத்துக்கு நன்றி. திருக்குறள் பொருள்களிலிருந்து சில சொற்களுக்குச் சற்று விலகியிருந்தது உண்மைதான். சென்னைப் பல்கலைப் பேரகராதி குறள்களை மேற்கோள் காட்டிப் பொருள் தந்திருந்தாலும், சற்று வேறுபட்டிருந்த புதிய பொருள்களை வெளிக்கொணரவும் முயன்றிருந்தேன். முதல் முயற்சியில் செய்திருக்கக் கூடாதுதான். கேணி என்பதற்கு அகழி என்ற பொருள் சரியா தவறா என்று திசை திருப்பும் உத்தியில் எழுந்ததே இவை! இனி வரும் திறனறித் தேர்வுகளில் எச்சரிக்கையாய் இருக்கிறேன்! நன்றி.

கருத்துரையிடுக